கொடுமுடி: ஸ்ரீனிவாச பத்மாவதி திருக்கல்யாணம், கொடுமுடியில் நேற்று நடந்தது. பிராமின் வெல்பேர் டிரஸ்ட், துவக்க விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண விழா நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை உஞ்சவிருத்தி தொடங்கி, சம்பிரதாய பஜனை, திவ்ய நாம தீபபிரதட்சணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து, மதியம், 2:00 மணி அளவில், ஸ்ரீனிவாச பத்மாவதி கல்யாணம் நடைபெற்றது. ஏழை பிராமணர்களுக்கு உதவி செய்யவே, அறக்கட்டளை துவங்கப்பட்டதாக, அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.