பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா அக்., 14 ல்கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ரக்ேஷாக்ன ேஹாமம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ேஹாமம் நடந்தது. மாரியம்மாள், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கோ பூஜை, 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு 7:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தன. இன்று மாலை 4:30 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து சிவாச்சாரியார்களை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு முதற்கால யாக பூஜைகளும் நடக்கிறது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியமம்மன் அறக்கட்டளை தலைவர் எம்.அருணாசலம், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.