பதிவு செய்த நாள்
21
அக்
2016
12:10
ராமாபுரம்: கருமனூரில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, அ.தி.மு.க., வினர், பால்குட ஊர்வலம் நடத்தினர். மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அடுத்த, கருமனூரில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, அ.தி.மு.க., வினர் பால் குடம் ஊர்வலம் நடத்தினர். விநாயகர் கோவிலில் புறப்பட்ட ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள், பால்குடம் சுமந்தபடி, முக்கிய வீதிகளின் வழியாக காகத்தலை அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு, அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. ஒன்றிய சேர்மன் மோகன், ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் பொன்னாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.