Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் கோலாகலமாக நடக்குது வளைகாப்பு குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழு ஆண்டுகளுக்கு பின் அறநிலைய துறை சுறுசுறு திருத்தணி கோவிலில் ராஜகோபுர பணி "விறுவிறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2016
11:10

முடங்கிக் கிடந்த, திருத்தணி முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

Default Image
Next News

அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநில பக்தர்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009, நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பதுநிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது; 2011க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், அடித்தளம் மற்றும் கல்ஹாரம் அமைத்ததோடு, பணி கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, ஒன்பதுநிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு, கோவில் நிர்வாகம், மூன்று முறை டெண்டர் விட்டும், இப்பணிகளை செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர், ராஜகோபுரம் பணிகளை மேற்கொள்வதற்கு, தாமாக வந்து, டெண்டர் எடுத்தார்.இதையடுத்து, இந்து அறநிலைய துறை ஆணையர் அனுமதியுடன், ராஜகோபுர கட்டுமான பணி, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின், இப்பணி மீண்டும் துவங்கியுள்ளதால், அறநிலைய துறை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

18 மாதங்களில் நிறைவு: முருகன் கோவிலில் கட்டப்பட்டு வரும், ராஜகோபுர கல்ஹாரம் மற்றும் அடித்தளம் பணிகள் முடிந்து, தற்போது ஒன்பதுநிலை ராஜகோபுரத்துக்கான பணி துவங்கப்பட்டு உள்ளது. இதை முடிப்பதற்கு, 18 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் துரித பணிகளால், ஒன்பது நிலைகளிலும் முருகப்பெருமானின் அலங்கார பொம்மைகள் இடம் பெறும். இவையின்றி, பக்தி பரவசத்துடன் மேலும் பல சிலைகள் உருவாக்கப்படும். ஆர்.நடராஜ ரத்தினம், உதவி கோட்ட பொறியாளர், திருத்தணி முருகன் கோவில்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar