Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அக்னி கரகம் ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஐப்பசி முதல் ஞாயிறு பூஜை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புயலில் இடிந்த தனுஷ்கோடி விநாயகர் கோயில் புனரமைப்பு!
எழுத்தின் அளவு:
புயலில் இடிந்த தனுஷ்கோடி விநாயகர் கோயில் புனரமைப்பு!

பதிவு செய்த நாள்

24 அக்
2016
10:10

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த விநாயகர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும், என இந்து அறநிலைத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆணையர் வீரசண்முகமணி, அக்னி தீர்த்த கரையில் 1.21 கோடி ரூபாயில் அமையவுள்ள சங்கல்ப மண்டபம், தோரண வாயில் படிக்கட்டு மாற்றியமைத்தல், புதிய சிமென்ட், பேவர் பிளாக் சாலை அமையும் இடத்தை ஆய்வு செய்தார். கோயிலுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு, திருப்புல்லாணி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சேதமடைந்த விநாயகர் கோயிலை ஆய்வு செய்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

ஆணையர் வீரசண்முகமணி கூறியதாவது: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அக்னி தீர்த்த கடலில் சங்கல்ப பூஜைக்கு தனி மண்டபம் அமைக்கப்படும். ரதவீதியில் கழிப்பறை, குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் கூடுதல் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்படும். கோயிலுக்குள் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆன்மிக முறைப்படி தீர்த்தங்கள் மாற்றியமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கோயில் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும். 1964ல் தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த விநாயகர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். சென்னை மாங்காடு கருமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்ததும், கும்பாபிஷேக தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar