Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தருமபுரம் ஆதீனம் தீபாவளி அருளாசி! கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா? கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் தீபாவளி அருளாசி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2016
02:10

மயிலாடுதுறை:திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் தீபாவளி அருள் வாழ்த்துரை மக்களுக்கு மனமகிழ்ச்சியும், புத்துணர்வும் தரும் பண்டிகைகளுள் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் விழாக்கள் அனைத்தும் இறையுணர்வை வளர்க்கும் முறையிலேயே அமைந்துள்ளன. நம் வீட்டையும், உடலை யும் சுத்தமாக வைத்திருப்பது போல் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உள்ளத் தூய்மையை பேணுவதற்கு மிகவும் ஊக்கம் தருவன நம் பண்டிகைக் காலங்கள் ஆகும்.

நாவிற்குச் சுவையான இனிய உணவு வகைகளை உண்பது இன்பம் தருதல் போல, செவிக்குச் சுவையாக இனிய மொழிகளைப் பேசுதல்“ இன்பமான அனுபவமாகும். ”யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று திருமந்திரம் கூறுகின்றது. திருக்குறளிலும் ” இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது. எல்லா உயிர்களும் இறை வனின் திருவருளுக்குரியவை. இந்த உண்மையை உணர்ந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும். உள்ளத்தில் விளங்கும் அன்பின் வடிவமாகவே வாக்கில் இனிய மொழி கள் வெளிப்பட வேண்டும்.

உடலின் செயல்களும் அமைய வேண்டும். ”” பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்று திருக்குறள் கூறுவதால் மக்கள் வாழும் பண்பு சார்ந்த வாழ்க்கைக்கு ஏற்பவே இயற்கை வளங்கள் கைகூடும். பருவகாலங்கள் சாதகமாக அமையும். நவீன விஞ்ஞான வளர்ச்சியை நம் பண்பாட்டுக்கு உகந்த முறையிலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை இறைவன் நமக்கு கருணையோடு வழங்கியருளிய பேறாகும். அதனால் இறைவழிபாட்டினை நாம் நியமமாகச் செய்து வரவேண்டும். அதனோடு மட்டுமின் றி நாம் செய்கின்ற புண்ணியங்களையும் இறைவன் திருவருளுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். இந்த தீபாவளித் திருநாள் மக்கள் அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தழைக் கச் செய்ய வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar