திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 11:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.காலை அனுக்ஞை பூஜைகள், யாகசாலை பூஜைகள் முடிந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நவ.,4ல் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நவ.,5ல் சூரசம்ஹார லீலையும், நவ.,6ல் தேரோட்டம் நடக்கிறது.