விருத்தாசலம்: தீபாவளியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சுமங்கலி பெண்களின் கேதார கவுரி நோன்பு நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் கம்பர் தெரு, ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண சுவாமி கோவில் கம்பத்தாழ்வார் பஜனை மடத்தில் தீபாவளியையொட்டி கேதார கவுரி நோன்பு நிகழ்ச்சி நடந்தது. சுமங்கலி பெண்கள் 21 எண்ணிக்கையில் இனிப்புகள், பூக்கள், பழங்கள், நோன்பு கயிறுகள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். ராதாகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நோன்பு கயிற்றை அணிந்து, பெண்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல், பெரியார் நகர் ராஜகோபால சுவாமி உள்ளிட்ட கோவில்களில் கேதார கவுரி நோன்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.