பதிவு செய்த நாள்
31
அக்
2016
11:10
வேலூர்: வாலாஜாபேட்டை அருகே உள்ள, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு டாக்டர் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில், தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானுக்கு, டாக்டர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தன்வந்திரி பகவானுக்கு நவகலச திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள், ஒரு லட்சம் தன்வந்திரி மகா மந்திரத்தை ஜெபித்தனர். நெய், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகிய பொருட்களைக் கொண்டு, தீபாவளி லேகியத்தை முரளிதர சுவாமிகள் தலைமையில் பீடத்தில் உள்ள டாக்டர்கள் சேர்ந்து, உரலில் வைத்து உலக்கையால் இடித்து தயார் செய்தனர். இந்த தீபாவளி லேகியம், பீடத்திற்கு வந்த, 50 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.