பதிவு செய்த நாள்
02
நவ
2016
11:11
கும்மிடிப்பூண்டி: அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தை துாய்மையாக பராமரித்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, ஆன்மிக அன்பர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். கவரைப்பேட்டை அருகே, அரியதுறை கிராமத்தில், மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு நிகராக போற்றி வணங்கப்படும் இந்த தலத்தில் உள்ள லிங்கத்தை ரோம மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கியதாக, வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்து அறநிலைய துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலின் முன், பரந்து விரிந்த குளம் ஒன்று உள்ளது. தற்போது அந்த குளத்தை சுற்றி புதர்கள் மண்டி உள்ளன. மேலும், அந்த குளத்தை சுற்றி, சுவர் இல்லாததால், குளம் அசுத்தம் ஆகிறது. குளத்தை எப்போதும் துப்புரவாக பராமரித்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, ஆன்மிக அன்பர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.