கோவை: கல்லறைத் திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர் சமாதிகளில் பிரார்த்தனை செய்தனர். கல்லறைத் திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கோவையில் சுங்கம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள, தங்கள் மூதாதையர் கல்லறைகளை, கிறிஸ்தவர்கள் கழுவி சுத்தம் செய்தனர். சூழ்ந்திருந்த களைச்செடிகளை அகற்றி, பெயின்ட் அடித்தனர். மலர் துாவி, குடும்பத்துடன் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.