பதிவு செய்த நாள்
03
நவ
2016
12:11
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று கல்லறை விழாவையொட்டி, கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மறைந்த முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் கல்லறை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, உப்பளம், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம் உட்பட பல பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில், கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை அலங்கரித்து, பூங்கொத்து வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தனர். தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் திருப்பலி நடந்தது. கல்லறை விழாவையொட்டி, மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயம் எதிரில், டேலியா, ரோஜா, தாமரை, ஆர்கிட் மலர்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.