Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டுக்கல்லில் கல்லறை திருநாள் ... கல்லறை விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் கல்லறை திருநாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
12:11

காரைக்குடி : காரைக்குடியில் கல்லறை திருநாள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள். இது, கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர். இறந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினைக்காத ஆன்மாக்களை நினைத்து, அவர்களுக்காக கல்லறை திருநாள் அன்று வேண்டுதல் ஜெபம் செய்கின்றனர். காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்துக்கு உட்பட்ட கழனிவாசல் சந்தை அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி, கல்லறை மந்திரிப்பு நடந்தது. அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்துக்குட்பட்ட அரியக்குடி கல்லறை தோட்டத்தில் பாதிரியார் அந்தோனி மைக்கேல் தலைமையிலும், செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்துக்கு உட்பட்ட ரஸ்தா கல்லறை தோட்டத்தில் பாதிரியார் அந்தோணிசாமி தலைமையிலும், ஆவுடை பொய்கையில் பாதிரியார் அருள்ஜோசப் தலைமையிலும் கல்லறை திருநாள் திருப்பலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar