பதிவு செய்த நாள்
04
நவ
2016
11:11
பொன்னேரி: அம்மன் கோவில்களில், நாக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நாக சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, பொன்னேரி, தேவத்தம்மன் நகர், தேவத்தம்மன், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன், வேண்பாக்கம் பள்ளம் நாகத்தம்மன், செல்லியம்மன், தடப்பெரும்பாக்கம் கன்னியம்மன், லட்சுமியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.கோவில்களில் இருந்த அரச மரம், வேப்பமரங்களை சுற்றிலும் பெண்கள் நுால்கட்டியும், அங்குள்ள நாகத்தம்மன் சிலைகளுக்கு பால் ஊற்றியும் வழிபட்டனர். தேவத்தம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரங்களுடன் ஊஞ்சல் சேவையும் நடந்தது. அதிகாலை முதல், பெண்கள் பக்தியுடன் சென்று அம்மன் கோவில்களில் வழிபாடு செய்தனர்.