Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ... திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி குருபூஜையில் குவிந்த வெளிமாநில சாதுக்கள்
எழுத்தின் அளவு:
கசவனம்பட்டி குருபூஜையில் குவிந்த வெளிமாநில சாதுக்கள்

பதிவு செய்த நாள்

05 நவ
2016
11:11

கன்னிவாடி: கசவனம்பட்டி கோயில் குருபூஜையில் ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்தி பெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு நவ. 3ல் துவங்கியது. இதில் பங்கேற்க பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்தனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டது. தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடத்தி, மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது. நவ., 4 மகா யாகம் நடத்தப்பட்டு, யாக தீர்த்தம், 108 படி பாலாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. மலர்ப்பந்தலுடன் மூலவருக்கு விசேஷ மலர் அலங்காரம், உற்சவருக்கு தங்க கிரீட அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள், பங்கேற்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar