Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோயில் ... பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்! பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டு பழமையான சமணர் கோவில் பராமரிக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டு பழமையான சமணர் கோவில் பராமரிக்கப்படுமா?

பதிவு செய்த நாள்

07 நவ
2016
11:11

திருப்பூர்: திருப்பூர் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், பாரமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது. திருப்பூர் அருகே உள்ள விஜயமங்கலத்தில், சமண மத கோவிலான, சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோவில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், கொங்கு நாட்டு சமண தலங்களின் தலைமை பீடமாக இருந்துள்ளது. மைசூரு அரசின் அமைச்சர் சாமுண்டராயரின் தங்கை, புளியம்மை, கொங்கு நாட்டு சிற்றரசரான, ஜைன கவிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்.முக்தி பெறுவதற்காக, விரதம் இருந்து உயிர் நீக்கும் பழக்கம், சமண மதத்தில் இருந்ததால், புளியம்மை, விஜயமங்கலத்தில், விரதம் இருந்து உயிர் நீத்துள்ளார். அவரது நினைவாக, இக்கோவில் கட்டப்பட்டது. மூலவராக, எட்டாவது தீர்த்தங்கரர் சந்திரபிரபா, சிம்ம வாகனத்தில் அமர்ந்து, தியான நிலையில் மகாவீரர் சிலை, என, இரு கருவறைகளுடன் இருந்துள்ளது. மதிப்பு மிகுந்த இரண்டு சிற்பங்களும், 1991ல் திருடப்பட்டுள்ளன.

கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம், ராஜகோபுரம், 40 அடி உயர தீப விளக்கு என, அற்புதமான கட்டடக் கலையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில், தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் சிதிலமடைந்து, பிரகாரம் முழுவதும் புதர்கள் மண்டி, பராமரிப்பின்றி, பாழடைந்து காணப்படுகிறது. இது குறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது: அற்புதமான நுணுக்கமான, அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன. ஒரு காலத்தில், சமண மதத்தின் வாழ்வியல் சிற்பங்கள், கல்வெட்டு சான்றுகள், செய்திகள் பராமரிப்பு இல்லாமல், அழிந்து வருகின்றன.பராமரிப்பு செய்யாவிட்டால், 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்று சான்று, விரைவில் அழிந்து விடும். இதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar