உழவாரத் திருப்பணிக்கு கிடைத்த பகவத் சேவா ரத்னா பட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2016 12:11
சென்னை: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், சென்னபுரி பக்த ஜன சமாஜம் சார்பில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 82வது ஜயந்தி விழாவில் அவர்களின் பொற்கரங்களால் கடந்த 5.11.16 அன்று, கிருஷ்ணகான சபாவில் நடந்த விழாவில், உழவாரத் திருப்பணி எஸ். கணேசன் அவர்களுக்கு பகவத் சேவா ரத்னா என்ற பட்டம் வழங்கி பாராட்டப்பட்டது.