காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி கோபுரத்தில், மரங்கள் முளைத்து க ட்டடத்திற்கு பா திப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும், பஞ்ச பூத த லங்களில் முதல் தலமாக கருதப்படுவதும், நாயன்மார்களில் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. ஏகாம்பரநாதர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில், நான்கு பிரகாரங்களை கொண்டது. கோவில் மூலவர் சன்னிதியில் இருந்து வெளியில் வரும் போது இடது ப க்கம் அமைந்திருப்பது நடராஜர் சன்னிதி; பழமையான கட்டடம். இதன் க ட்டடத்தில் மரங்கள் முளைத்துள்ளன. இதனால் கருங்கல்லாலான கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக ோவிலில் இருந்த இரட்டை திருமாளிகைமண்டபம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமலும் பராமரிப்பும் இல்லாமலும் விட்டதால், சிதிலம்அடை ந்து இடிந்து போனது.அந்தக ட்டடம் மீண்டும் புதுப்பிக்கும் பணி நட ந்து வருகிறது. அதுபோன்றபா திப்பு ஏற்படுவதற்கு முன் நட ராஜர் சன்னிதி கோபுரத்தில் முளைத்துள்ள மரங்களை்அகற்றக ோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.