Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாராயண பெருமாள் கோவிலில் ... ராஜராஜ சோழனின் சதய விழா தேர்தலால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைல் கல்லில் தமிழ் எண்கள் : பல்லடம் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2016
12:11

திருப்பூர்: ஆங்கிலேயர்கள், தமிழ் எண்களை பயன்படுத்தியிருப்பதற்கான ஆதாரமாக, திருப்பூர் அருகே, 200 ஆண்டு பழமையான, தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி, ய க உ என, தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்தன. தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும், தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து, பலருக்கும் அது தெரியாத சூழலே உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். ரோடுகளில், ஊரின் துாரத்தை, தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக, 200 ஆண்டு பழமையான மைல் கல், திருப்பூர் மாவட்டம், பல்லடம், ஜெ.கிருஷ்ணாபுரம் பகுதியில் கிடைத்துள்ளது. திருப்பூர், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ரவிக்குமார் கூறியதாவது: மைல் கற்கள் வைக்கும் நடைமுறை, தமிழகத்தில், கி.பி., 10ம் நுாற்றாண்டில் துவங்கியது. இதில், ரோமன், அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது. இக்கல்லில், இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப்படுகின்றன. பல்லடம், 11 மைல் என்பது, பல்லடம், ய க என்றும்; பல்லடம், 4 என்பது, பல்லடம் ச எனவும் எழுதப்பட்டுள்ளது. மைல் கற்கள், 70 செ.மீ., உயரம்; 50 செ.மீ., அகலம் கொண்டுள்ளன. தற்போது, கி.மீ., குறிக்கப்படும் அளவு, அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேயர் கூட, தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில், தற்போது, இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாகும். இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar