Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது துலங்கும் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத அதிர்ஷ்டம்
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத அதிர்ஷ்டம்

பதிவு செய்த நாள்

11 நவ
2016
04:11

எதையும் சாதிக்கத் துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு அவர் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருக்கும் நிலையில், இந்த மாதம் தொட ங்குகிறது. இது சிறப்பான நிலை. அவரால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். புதிய வீடு, வாகனம் வா ங்க யோகமுண்டு. குருபகவான் 11-ம் இடமான கன்னி ராசியில் இருப்பது மிகவும் சிறப்பான நிலை. அவரால் பொருளாதார வளம் மேம்படும்.  வீட்டுத்தேவைகள் மனம் நிறையும் அளவுக்கு நிறைவேறும். கடந்த மாதம் போல் நன்மைகள் இந்த மாதமும்  சுக்கிரனால் நற்பலன்கள் தொடரும்.  சூரியன், புதன் சதாகமற்ற நிலையில் இருப்பதால் மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தோடு  புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நவ.25-வரை வீட்டில் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம்.  பொருள் இழப்பு ஏற்படலாம். நவ.29,30ல் பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.   நவ.16, டிச.12, 13ல் அக்கம் பக்கத்தினர் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.21,22,23ல் உறவினர்கள் வ ருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.6,7ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.4-க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கேற்ற லாபத்தைக் காணலாம். டிச.4-க்கு பிறகு அரசு வகையில் இ ருந்து வந்த இடையூறுகள் குறைந்து விடும். அரசின் சலுகை கிடைக்கும். டிச.10,11-ல் எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் பணம் கிடைக்கும். நவ.26,27,28  டிச.1,2,3ல் பணப்பொறுப்பை நீங்களே நேரடியாகப் பார்த்துக் கொள்வது விரயத்தைக் குறைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணியில் பிரச்னை ஏதும் வராது. மேல் அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும். நவ.21,22,23-ல் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். இடமாற்ற பீதி நவ.25-க்கு பிறகு மறையும். நவ.21-க்கு பிறகு அலுவலகத்தில்  உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவம் நடக்கலாம். டிச.4-க்கு பிறகு தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம்  காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை டிச.6-க்குள் கேட்டுப் பெற்று கொள்ளவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நல்ல வசதிகளைப் பெற்று வாழ்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது  கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளைப்பெறலாம். எண்ணங்கள் ஈடேறும். டிச.8,9-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். நண்பர்களுடன் சுற்ற மனம் துõண்டும்.  அதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால் தான் தேற முடியும்.

விவசாயிகள் சிறப்பான மகசூல் பெறலாம். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம்.   கால்நடைச் செல்வம் சிறப்படையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு  வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பணியில் உள்ள பெண்களுக்கு உயர்பதவி தேடி வரும். டிச.21-க்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். டிச.4,5-ல் புத்தாடை, நகை வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப் படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: நவ.16,21,22,23,24,25,29,30 டிச. 4,5,10,11,12

கவன நாள்: நவ.17,18, டிச.13,14,15ல் சந்திராஷ்டமம். அப்போது மட்டும் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வழிபடுங்கள்.  புதன்கிழமை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ராகு, -கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar