Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக பயணம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது துலங்கும்
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது துலங்கும்

பதிவு செய்த நாள்

11 நவ
2016
04:11

தயாள குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகனான குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கேது, சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள்.   செவ்வாய் டிச.6-ல் சாதக இடமான ரிஷபத்திற்கு வருகிறார். அவரால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.  தொட்டதெல்லாம் துலங்கும். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு-, மனை வாங்க யோகம் கூடி வரும். புதன் நவ.25-ல் 12-ம் இடத்தில் இருந்து, உங்கள் ராசிக்கு வந்தாலும் அவரால் அதிக நன்மை செய்ய முடியாது. மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  எல்லா விஷயங்களிலும் பொறுமையும், நிதானமும் தேவை. மாத ஆரம்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.  பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குறிப்பாக டிச.1,2,3-ல் அவர்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். நவ.26,27,28-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும் அதே நேரம் டிச.8,9-ல் உற்றார் உறவினர் வகையில் வீண் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அப்போது சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.25க்கு பிறகு குடும்பத்தில் மனக்கசப்பு வரலாம்  எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் சூரியனால்  பொருள் விரயம் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தை நேரடியாகக்  கவனித்துக் கொள்வது நல்லது. பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.  நவ.16, டிச.12,13-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.  நவ.29,30, டிச.4,5-ல் பொருள் கல்லாப்பெட்டி உங்கள் நேரடி பார்வையில் இருக்க வேண்டும். செவ்வாயின் நிலையால் கடைகளில் பொருள் களவு  போக வாய்ப்புண்டு. பாதுகாப்பை பலப்படுத்தவும். போட்டியாளர்களை சமாளிக்க வேண்டி இருக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது  அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, -செலவு கணக்குகளை சரியாக வைத்துக்  கொள்ளவும். மாத பிற்பகுதியில் அரசு சலுகை, வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு  அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். சிலர் இடமாற்றத்தை காணலாம். நெருப்பு தொடர்பான ÷ வலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.  நவ.24, 25-ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். டிச.4-க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்÷ னற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

கலைஞர்களுக்கு  காரியத்தடை விலகும். பெண்களால்  பொருள் சேரும். புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை எளிதில் பெறலாம்.  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.

மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியரின் அறிவுரையைப் பின்பற்றுவது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். அதேநேரம் அதற்கான பலன் கிடைக்கும்.பயறு, பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம்.  டிச. 6-க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் சிறப்படைவார்கள். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.டிச.6,7ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இ ருந்து பொருட்கள் வாங்கலாம். நவ.17,18, டிச.14,15-ல் சகோதரிகளால் உதவி கிடைக்கும். நவ.25-க்கு பிறகு உறவினர்களிடம் கருத்து வேறுபாடு  வரலாம். பொறுமை தேவை. டிச.6-க்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு உய ர்பதவி தேடி வரும். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.  நவ.21,22,23, டிச.10,11-ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.   வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: நவ.16,17,18,24,25,26,27,28, டிச. 1,2,3,6,7,12,13,14

கவன நாள்: நவ.19,20-, டிச.15 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் புதிய முயற்சி ஏதும் செய்ய வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான ÷ பச்சுவார்த்தையை தள்ளிப் போடலாம். அனாவசியமாக எதிலும் தலையிடக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  பெருமாளை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு தைரியம் தரும். புதனுக்கு அர்ச்சனை செய்யு ங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar