Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மகிழ்ச்சியில் மிதப்பீர்கள் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அதிகரிக்கும் லாபம்
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அதிகரிக்கும் லாபம்

பதிவு செய்த நாள்

11 நவ
2016
04:11

நல்ல வழியை மட்டுமே நாடும் கும்ப ராசி அன்பர்களே!

சனிபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் போது இந்த மாதம் தொடங்குகிறது. இது சிறப்பான  நிலை. உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்கும். அவரால் நினைத்தது எல்லாம் நிறைவேறும். புதன் நவ.25-ல் இடம் மாறினாலும் நற்பலனைத்  தொடர்ந்து கொடுப்பார். சுக்கிரன்  டிச.4- வரை நன்மைகளை தருவார். எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடித்து நல்ல பணவரவை காண்பீர்கள்.  மதிப்பு மரியாதை சிறப்படையும். குடும்பத்தில் கணவன், -மனைவி இடையே அன்பு தழைக்கும். டிச.6,7ல் மனைவி குடும்ப வகையில் பணம்  கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.1,2,3-ல் உறவினர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.12,13ல் அவர்கள் வகையில்  கருத்து வேறுபாடு வரலாம்.  ஒதுங்கி இருக்கவும். நீண்ட நாளாக நீங்கள் போட்ட திட்டமொன்று இந்த மாதம் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. இனி÷ மல் எங்கே வரப்போகிறது என்று கை விட்ட பணம் எதிர்பாராத வகையில் வந்து சேரும்.

தொழில், வியாபாரம்- சிறப்படையும். பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். விரிவாக்கப் பணிகள் வெற்றிகரமாக நடந்தேறும்.  நவ.25-க்கு பிறகு அரசு, வங்கி வகையில் கேட்ட சலுகைகள், கடன் கிடைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும். டிச.4,5,8,9ல் வரவு செலவை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பதன் மூலம் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

நவ.19,20-ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து  விடுபடுவர்.  டிச.6-க்கு பிறகு செவ்வாயால்  உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். இருப்பினும் சமயோசிதமாக  சமாளிப்பீர்கள். புதனின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை  காண்பர்.  சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு  மாற்றம் பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். நவ.29,30ல் உயர் அதிகாரிகளிடம் வைத்த ÷ காரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்- சிறப்பான நிலையில் இருப்பர்.  புதிய ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். டிச.4-க்கு பிறகு சிறு நஷ்டம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மாத ஆரம்பத்தில் சிறப்பான பலனையே பெறுவர். நவ.25-க்குள் எதிர்பார்க்கும் பதவியைக் கேட்டுப் பெற்று விடுவது பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் தடைகளைத் தவிர்க்கும்.

மாணவர்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறலாம்.  விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளில் வெற்றி காணலாம். உல்லாசப்பயணம்  சென்று வர வாய்ப்புண்டு. ஆனால் அவ்வாறு செல்லும் போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கால்நடை மூலம் ஓரளவு பலன் உண்டு. பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய  சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள்- பிள்ளைகளால் பெருமை காண்பர். நவம்பர் 21,22,23-ல் சகோதரிகளால் உதவி கிடைக்கும். டிச.7-க்கு பிறகு கை நிறைய பணவரவும்,  அதற்கு செலவு வைக்க சொந்தபந்தங்கள் வருகையும் இருக்கும். டிச.10, 11ல் புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என சென்று வரும் வா ய்ப்பு கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். நவ.25-க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். சுய தொழில் செய்து வரும்  பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுமூக உறவு இருக்கும்.

நல்ல நாள்: நவ.19,20,21,22,29,30 டிச.1, 2,3,6,7,10,11.

கவன நாள்: நவ.23,24,25 சந்திராஷ்டமம். அப்போது  அனாவசியமாக எதிலும்
தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தையை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: பச்சை,  சிவப்பு

பரிகாரம்: விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும்  பைரவருக்கு பூஜை செய்யலாம். சனிக்கிழமைகளில் சாஸ்தா கோவிலுக்கு சென்று வந்தால் பல்வேறு நன்மைகள் பெறலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar