Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழிலில் வளர்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மகிழ்ச்சியில் மிதப்பீர்கள்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மகிழ்ச்சியில் மிதப்பீர்கள்

பதிவு செய்த நாள்

11 நவ
2016
04:11

எதிர்நீச்சல் போடுவதில் ஆர்வமுள்ள மீன ராசி அன்பர்களே!

குருபகவானை ஆட்சி நாயகனாகக் கொண்ட உங்களுக்கு  இந்த மாதம் நன்மைகள் அதிகரிக்கும். புதன் நவ.25-க்கு பிறகும், சுக்கிரன் டிச.4-க்கு பி றகும், செவ்வாய் டிச.6-க்கு பிறகும் நன்மை தருவார்கள். மேலும் குரு, சனி, ராகு நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள்.  பணம், பதவி என்றெல்லாம்  இருந்தாலும் கூட, சூரியன் மட்டும் உங்களுக்கு எதிராக இருந்து மதிப்பு மரியாதையை குறைத்துக் கொண்டிருக்கிறார். இது தற்காலிகச் சூழல் தான்.  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து அவரை மகிழ்வித்தால் அவரும் உங்கள் மீது இரக்கம் கொள்வார். மொத்தத்தில், குடும்பத்தில் மகிழ்ச்சியும், பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டு. வீட்டில் நிலவி வந்த திருட்டு பயம்  இருக்காது. டிச.4,5-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.17,18, டிச.14,15ல் அவர்கள் வகையில் சில பிரச்னைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.8,9-ல் சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.  டிச.4-க்கு பிறகு எதிர்பாராத வகையில் பணவரவு ஒன்று கிடைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட போகிறீர்கள். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு எந்த தொழிலாக இருந்தாலும் லாபம் நன்றாக இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறலாம்.   நவ.21, 22,23-ல் எதிர்பாராத வகையில் அதிக லாபம் கிடைக்கும். டிச.6,7,10,11ல் முயற்சிகளில் தடை ஏற்படலாம். பொருள் விரயத்தை தவிர்க்க  உங்கள் நேரடி பார்வையில் வரவு செலவை வைத்துக் கொள்ளலாம்.  போட்டியாளர்கள் ஏதேனும் சதி செய்யலாம். இருப்பினும் டிச.6-க்கு பிறகு  நிலைமை சீராகி லாபம் அதிகரித்து விடும்.

பணியாளர்களுக்கு மாத முற்பகுதியில் சில பிரச்னைகள் வரலாம். உங்கள் பணியை மற்றவர்களின் பொறுப்பில் விட்டுச்செல்ல வேண்டாம். சில ÷ வண்டாத ஊழியர்கள் உங்களைப் பற்றி நிர்வாகத்திடம் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கலாம். என வே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருப்பது நல்லது. டிச.1க்கு பிறகு குருவின் பலத்தால் மேன்மை ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை டிச.6-க்குள் கேட்டுப் பெற்றுக் கொள்வது பலனளிக்கும். டிச.1,2,3-ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு  உண்டு. உங்களுக்கு வேண்டாத ஊழியர்கள் கூட அவர்களுக்கு வரும் சிக்கலில் இருந்து தப்ப உங்களுக்கு ஆதரவு தரும் இக்கட்டுக்கு ஆளாவர்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உயர்பதவி தேடி வரும். சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கலைஞர்களுக்கு- எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன டிச.4-க்கு பிறகு மறையும். அதன் பிறகு  புதிய  ஒப்பந்தங்கள் பெற்று சிறப்பு நிலையை அடையலாம். உங்கள் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு கண்டிப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில் இருந்து பாராட்டு கிடைக்க பெறலாம்.

மாணவர்கள்- நல்ல நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம். மாத மத்தியில் அதிகமாகப் படித்து மனதில் தேக்கி வைத்துக் கொள்ளு ங்கள். அது பின்னாளில் உங்களுக்கு கைகொடுக்கும்.

விவசாயிகள்- நிறைந்த செல்வ வளத்தைக் காண்பர். விளைச்சல் அதிகரிக்கும். கால்நடையால் வருமானம் பெருகும். புதிய சொத்து வாங்கலாம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்காத அளவுக்கு, பக்கத்து
நிலக்காரர்களிடம் சுமூகமாக இருப்பது நல்லது.

பெண்கள்- மகிழ்வான நிலையில் இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். கணவர் மற்றும் குடும்பத்தார் உங்களைப் புகழ்வர்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்  பதவி கிடைக்க வாய்ப்புண்டு. நவ.16, டிச.12,13-ல் புத்தாடை, நகை, வாங்கலாம். உடல்நலம்-  நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: நவ.16,21,22,23,24, டிச.1,2,3,4, 5,8,9,12,13.

கவன நாள்: நவ.25,26,27 சந்திராஷ்டமம். இந்நாட்களில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தையைத் தவிர்க்கலாம். முக்கிய முடிவுகளை ஒத்திப்÷ பாடலாம்.

அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். சூரிய வழிபாடு செய்தால்  எதிரிகளின் இடையூறு இடம் தெரியாமல் போகும். சனிக்கிழமை ராமபிரானை வழிபடுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar