பதிவு செய்த நாள்
12
நவ
2016
11:11
திருப்பூர்: அவிநாசி, பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவிலில், மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சொர்ண பைரவர் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது. நேற்று முன்தினம், காலை, 6:30 மணிக்கு, அபிஷேகம், ஆரத்தி, கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு, ஆரத்தி பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் பூஜையும், தொடர்ந்து, நிலத்தேவர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலையில், ஆரத்தியை அடுத்து, பல்லக்கு சேவை நடைபெற்றது. இரவு ஆரத்தியை தொடர்ந்து, இரவு, 9:30 மணிக்கு, அஷ்ட மருந்து சாத்துதல் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று, விநாயகர் பூஜையுடன் விழா, துவங்கியது. பாபா, 1008 சங்கு ஹோமம், இரண்டாம் கால யாக வேள்விகள் நடந்தது. நாடி சந்தானம் நிகழ்ச்சியை அடுத்து, காலை, 10:00 மணிக்கு, சொர்ண பைரவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில், 1,008 சிறப்பு சங்கு அபிஷேகத்தை அடுத்து, மதியம்,12:30 மணிக்கு, பகல் ஆரத்தியும், நாம சப்தம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஆரத்தியும், சாய் பஜனை தொடர்ந்து, சிறப்பு பல்லக்கு சேவை நடைபெற்றது. இரவு ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.