மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2016 12:11
குளித்தலை: திருச்சாப்பூர் மகா மாரியம்மன் கோவிலில், கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., திருச்சாப்பூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு, நேற்று காலை, 9:50 மணிக்கு, கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.