சேத்தியாத்தோப்பு: வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ச்சவம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மூலவர் அங்காளபரமேஸ்வரிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், எலுமிச்சம் பழச்சாறு, நல்லெண்ணை உள்ளிட்ட 15 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் அங்காளபரமேஸ்வரிக்கு மலர் அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.