ஊமச்சிகுளம்:வெளிச்சநத்தம், மீனாட்சிபுரம் ஊர் சார்பில் முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. காலை பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பகலில் அன்னதானம் நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் புறப்பபட்ட பெருமாள் பல்வேறு பகுதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு அம்புவிடும் லீலை நடந்தது. சார்பு நீதிபதி தம்புராஜ் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை அழகர்போஸ், ஊராட்சி தலைவர் இந்திரஜித் செய்திருந்தனர்.