பதிவு செய்த நாள்
16
நவ
2016
11:11
மாமல்லபுரம்: மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் சுவாமிக்கு, நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மாமல்லபுரத்தில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள, ஒரே சைவ கோவிலாக, மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி நாளான நேற்று முன்தினம், சுவாமிக்கு அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. வழக்கமான பகல் வழிபாட்டைத் தொடர்ந்து, இரவு, சுவாமிக்கு அரிசி சாதம் சார்த்தி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சாற்றிய சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கல்பாக்கம் நகரியம், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர்; சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் இவ்வழிபாடு நடந்தது.