குருக்ஷேத்திரப் போர் களத்தில் அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் போதித்தது பகவத் கீதை. இதுபோல் இன்னும் பல கீதைகள் உண்டு. அவற்றுள் சில:
பிக்ஷு கீதை: முதலில் தோன்றிய கீதை இது. பிறவிப் பெருங்கடலை நீந்த, வழிகாட்டும் விளக்கம் பிக்ஷு கீதை. ராம கீதை: சித்திரகூடத்தில் தம்பி பரதனுக்கு ராமன் அருளிய தத்துவ உபதேசம் ராம கீதை. சிவ கீதை: சிவபெருமானின் பெருமைகள் மற்றும் பாசுபத விரதம் குறித்து ராமனுக்கு அகஸ்தியர் அளித்த போதனைகளே சிவ கீதை. குரு கீதை: ஸ்காந்த புராணத்தில், குரு தத்துவ இலக்கணமாக அமைந்து விளக்குவது குரு கீதை. கணபதி கீதை: முத்கலபுராணத்தில் விநாயகர் உபதேசித்த சத்திய தத்துவமே கணபதி கீதை. தேவி கீதை: தன்னை மகளாக அடைய விரும்பிய பர்வத ராஜனுக்கு பராசக்தி அருளிய உபதேசமே தேவி கீதை. ஹம்ஸ கீதை: ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்காந்தத்தில் பார்த்தசாரதியான கண்ணன், உத்தவருக்கு உபதேசித்த தத்துவங்களே ஹம்ஸ கீதை.