பதிவு செய்த நாள்
24
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: அறுபடை வீடு முருகன் கோவில் கட்டும் பணி, நேற்று, பூமி பூஜையுடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கோபாலபுரம் கிராமத்தில், சித்துார் நெடுஞ்சாலையில், அறுபடை வீடு முருகன் கோவில் கட்டும் பணி, நேற்று, பூமி பூஜையுடன் துவங்கியது. நட்சத்திர வடிவில் கட்டப்பட்டு, அறுபடை வீடு கோவில்களையும் ஒரே கோவிலில் வடிவமைக்கும் விதமாக, கோபாலபுரத்தில் முருகன் கோவில் கட்டப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளாக, விநாயகர் கோவில் கட்டும் பணி, இதே வளாகத்தில் நடந்து வருகிறது. அந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், முதன்மையான அறுபடை வீடு முருகன் கோவில் கட்டும் பணி நேற்று துவங்கியது. காலை 10:30 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்க, ஆறு கோவில்களின் அஸ்திவாரம் அமைக்கும் பணி, பூஜையுடன் துவங்கியது. இதில், விடியங்காடு, கோபாலபுரம், நாகபூண்டி, மயிலாடும்பாறை, பைவலசா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.