Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பராஜபுரம் கோவிலில் அகழாய்வு ... விளாச்சேரியில் தயாராகும் ’மெகா சைஸ்’ அகல் விளக்குகள் விளாச்சேரியில் தயாராகும் ’மெகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்துக்கள் கோவில் கட்ட நிலம்: முஸ்லிம்கள் அசத்தல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்துக்கள் கோவில் கட்ட நிலம்: முஸ்லிம்கள் அசத்தல்!

பதிவு செய்த நாள்

25 நவ
2016
11:11

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில கிராமம் ஒன்றில், இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு, முஸ்லிம்கள் இலவசமாக நிலம் வழங்கினர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சிகார் மாவட்டத்தில், கோலிடா என்ற கிராமத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும், பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள், சுரஜல் மாதாவுக்கு சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மிக சிறிதாக இருந்த, அந்த கோவிலை விரிவுபடுத்தி, பெரிதாக கட்ட திட்டமிட்டனர்.

தானம் : ஆனால், கோவிலை சுற்றி இருந்த நிலம், இடுகாடு அமைப்பதற்காக, முஸ்லிம்கள் வாங்கி வைத்திருந்தனர். இந்த தகவல் தெரிந்ததும், அப்பகுதி முஸ்லிம் மக்கள் கூடி, இதுபற்றி விவாதித்தனர்; கோவிலுக்கு தேவைப்படும் நிலத்தை, விற்பனை செய்யாமல், தானமாக வழங்குவது என முடிவு செய்தனர். அதன்படி, அந்த நிலம், கோவில் கமிட்டிக்கு, சட்டப்படி தானமாக வழங்கப்பட்டது.

பிரமாண்ட கோவில் : இதை தொடர்ந்து, அந்த இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், இந்துக்கள் பிரம்மாண்ட கோவிலை கட்டியுள்ளனர்; அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில், நிலத்தை தானமாக வழங்கிய, முஸ்லிம் சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தாமாக முன் வந்து.. இதுகுறித்து அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் சிவபால் சிங் கூறியதாவது: எங்கள் கிராமத்தில், இந்துக்கள் - முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு நிலம் தேவை என அவர்களிடம் கேட்கவில்லை. அதற்குள்ளாகவே, எங்கள் தேவையை அறிந்து, முஸ்லிம்கள் முன் வந்து, நிலத்தை தானமாக வழங்கினர். இதன் மூலம் எங்கள் கிராமத்தில் மத நல்லிணக்கம் மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar