Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்றே சொன்னார் ஆண்டவர்: இன்று ... அகத்தீஸ்வரர் கோவில் புது தேர் வெள்ளோட்டம் அகத்தீஸ்வரர் கோவில் புது தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் நூற்றாண்டு காலம் நடக்கும் ஸ்படிகம், மரகத லிங்க பூஜை
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் நூற்றாண்டு காலம் நடக்கும் ஸ்படிகம், மரகத லிங்க பூஜை

பதிவு செய்த நாள்

28 நவ
2016
11:11

கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மரகதநடராஜர் சன்னதியில் நுாற்றாண்டு காலமாக ஸ்படிக, மரகத லிங்க பூஜை நடந்து வருகிறது. பச்சை மரகத நடராஜர் சன்னதி முன்புற மண்டபத்தில் பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை (நித்ய காலம்) நடக்கிறது. பாதுகாப்பாக உள்ள பெட்டியின் மூலம் ஸ்படிக, மரகத லிங்கத்தை பீடத்தில் வைத்து, பால், தயிர், பன்னீர், தேன், அன்னம், விபூதி, சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஸ்தானிக சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், பல நுாற்றாண்டு காலமாக நடந்து வரும் நித்ய பூஜையில் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விஷேச பூஜையில் பங்கேற்பதற்காக வந்து செல்கின்றனர். மரகத நடராஜருக்கு செய்யும் அபிஷேகத்தை, ஸ்படிக, மரகத லிங்கம் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் தவிர 364 நாட்களும் மகா அபிஷேகம் லிங்கத்திற்கு செய்யப்பட்டு வருகிறது. பிற்பகலில் வழங்கப்படும் வெள்ளை சோற்றை உண்பதற்காக ஏராளமான காக்கைகள், கூடுவது வழக்கம். வியாசர் பகவான் பகல்பொழுதில் மறைபொருளாக வருவதாக ஐதீகம் உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar