பதிவு செய்த நாள்
02
டிச
2016
12:12
கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களில், நேற்று உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற, கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இங்குள்ள பத்து உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அவ்வப்போது திறந்து, பக்தர்களின் காணிக்கை கணக்கீடு செய்து வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், இந்து சமய அறநிலையத்துறையின் துணை கமிஷனர் பழனிகுமார், இணை கமிஷனர் முருகைய்யா, செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு, நேற்று மதியம், 12:00 மணிக்கு எண்ணப்பட்டது. இதில், தங்கம், 28.700 கிராம், வெள்ளி, 53.580 கிராம், 1,000 ரூபாயில், 124 நோட்டுகள், 500 ரூபாயில், 517 நோட்டுகள், 100 ரூபாயில், 3,778 நோட்டுகள் உட்பட, மொத்தம், 11.74 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், அமெரிக்க டாலர், பக்ரைன், சவுதி அரேபியா, நைஜீரியா நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் உண்டியலில் இருந்தன. காணிக்கை தொகையை, கோபி கார்ப்பரேசன் வங்கியில் அதிகாரிகள் செலுத்தினர்.