விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, மழை வேண்டி, ஏரி தண்ணீரில் நின்று ஆழ்வார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உள்ள கொட்டியாம்பூண்டி கிராமத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவள்ளி தாயார் திருச்சபை மற்றும் கோபாலன் பஜனை குழுவினர், நேற்று மாலை 4.00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஜனை பாடல்களை பாடி , அங்குள்ள ஏரிக்கு சென்றனர். மழை வேண்டி, ஏரி பகுதியிலுள்ள துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்து , ஏரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நின்று, ‘ஆழிமழை கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ என்ற பாசுரத்தை, 108 முறை பாடி, சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, துர்க்கையம்மனுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை செய்து , அன்னதானம் வழங்கினர்.