பதிவு செய்த நாள்
05
டிச
2016
01:12
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று 4ம் தேதி ஞாயிற்றுகிழமை நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், தண்டாயுதபாணி ஆகிய கோவில்களுக்கு 9:45 மணிக்கு கடம் புறப்பட்டு 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.