தந்திரி அன்பளிப்பு தொகை உயர்வு : தேவசம்போர்டு தாராளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2016 12:12
சபரிமலை: பூஜைகள் நடத்துவதற்காக சபரிமலை தந்திரிக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு தொகையை உயர்த்தி தேவசம்போர்டு உத்தரவிட்டது. சபரிமலையில் முக்கிய பூஜைகளை தந்திரி நடத்து வார். இந்த பூஜைகள் நடத்தும் உரிமை பூர்வீகமாக தாழமண் மடத்துக்கு உரியது. பூஜைகளுக்கு அன்பளிப்பாக தேவசம்போர்டு சிறிய தொகை வழங்கி வந்தது.இதை அதிகரிக்க வேண்டும் என தந்திரி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த அதிகாரிகள் தொகையை உயர்த்தி உத்தரவிட்டனர். படிபூஜைக்கு வழங்கப்பட்ட 850 ரூபாய், தற்போது 1,376 ஆகவும்; உதயாஸ்தமன பூஜைக்கு வழங்கப்பட்ட 751 ரூபாய், 1,251 ஆகவும் உயர்த்தப்பட்டது. தந்திரி சார்பில் முறையே,1,100 மற்றும் 926 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. நெய் அபிஷேகத்துக்கு ஒரு தேங்காய்க்கு 15 காசு வழங்கப்படுகிறது; இதில் மாற்றம் இல்லை.