பரமக்குடி : பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருகார்த்திகையை முன்னிட்டு விசாலாட்சி சமேத சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். கோயில் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை எரிக்கப்பட்டது. இதுபோன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தீப வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.