Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அதிகரிக்கும் ஆடம்பரச் செலவு ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழிலில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழிலில் வளர்ச்சி

பதிவு செய்த நாள்

14 டிச
2016
02:12

வெளிப்படையாகப் பேசி மகிழும் மேஷராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களான கேது, செவ்வாய் 11ம் இடத்தில் இணைந்து  இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.  புதன் டிச.19ல் இருந்து 2017  ஜன.8 வரை விருச்சிகத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். அதன்பின் அவர் வக்ரம் அடைந்து தனுசிற்கு செல்வதால் நற்பலன் குறையும். சுக்கிரன்  டிச.29க்கு பிறகு கும்பத்தில் நின்று நன்மையை வாரி வழங்குவார். கடந்த மாதம் குடும்பத்தினரிடையே இருந்த கருத்துவேறுபாடு அடியோடு  மறையும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வர். புதன்  டிச.19ல்   வக்ரம் அடைந்து விரு ச்சிக ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். கேது, செவ்வாயால் மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவை யறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்க யோகம் கை கூடி வரும். ஆனால்   சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். டிச.29க்கு பிறகு பணவரவு அதிகரிக்கும். டிச.18க்கு பிறகு  பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும்.குறிப்பாக  ஜன.7,8 அனுகூலமான நாட்களாக அமையும். ஜன.2,3ல்  உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.   டிச.17,19 ஜன.13ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இரு க்கவும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. டிச.29க்கு பிறகு  நிலைமை சீராகும். டிச.18க்கு பிறகு பெண்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். டிச.21,22ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.  ஜன.4,5,6,9,10ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.

பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு உரியவராகத் திகழ்வர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப் புண்டு.  டிச.19ல் இருந்து ஜன.8 வரை தனியார் துறையில் பணியாற்றுபவர்கள்  நல்ல வளர்ச்சியைக் காண்பர். அதிகாரிகளின் ஒத்துழைப்பால்  விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். டிச.31, ஜன.1ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.

கலைஞர்கள் விடாமுயற்சியுடன் முன்னேற்றம் காண்பர். மறைமுகப் போட்டி,  அவப்பெயர்  முதலியன  ஜன.29க்கு பிறகு மறையும். அதன் பின்  புதிய ஒப்பந்தம் எளிதாக கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள் சிறப்பான பலனைப்  பெறுவர். சிலருக்கு  அரசாங்க வகையில் பட்டம், பரிசு  கிடைக்க வாய்ப்புண்டு.

மாணவர்கள் டிச.19ல் இருந்து ஜன.8 வரை  சிறப்பான வளர்ச்சி காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று  வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. மாத இறுதியில்  படிப்பு தவிர்த்த மற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட  மகசூல்  அதிகரிக்கும்.   கால்நடை வகையில் நல்ல  வருமானம் கிடைக்கும். காய்கறிகள், கீரை, பழ வகைகள்,  பயறு வகைகள் மூலம் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். பணியாற்றும் பெண்கள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். டிச.18க்கு பிறகு பிரிந்த  தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வர். டிச. 23,24ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: டிச.16,21,22,23,24,31 ஜன.1, 2,3,7,8,11,12

கவன நாள்: டிச.25,26,27 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த  பேச்சை தவிர்ப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 3,5   நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரனை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் சூரிய தரிசனம் செய்து ஏழைகளுக்கு கோதுமை தானம்  கொடுக்கலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar