Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அடிக்கடி பயணம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

14 டிச
2016
02:12

சமயோசிதமாக செயல்படும் மிதுனராசி அன்பர்களே!

புதன் டிச.19ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு  6ம் இடமான விருச்சிகத்திற்கு மாறி நன்மை கொடுப்பார். ஆனால் அவர் 2017 ஜன.8ல்  வக்ர  நிவர்த்தி  பெற்று பழைய இடத்திற்கே வருகிறார்.  இதனால் சுமாரான பலனே உண்டாகும்.  சுக்கிரன், சனி,ராகு ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலன்  வழங்க காத்திருக்கின்றன. சூரியன் 7ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் சுமாரான பலன் கிடைக்கும்.   சுக்கிரன் டிச.30  வரை மகர ராசியில் இ ருப்பதால் சமூகத்தில் மரியாதை உயரும். ஆடம்பர வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.  அதன்பின் அவர் கும்ப ராசிக்கு  மாறிய பின் சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் பெருகும். குடும்பத்திற்கு  தேவையான வசதி அனைத்தும்  கிடைக்கும். கடந்த மாதம் நிலவிய குழப்பம்,  சண்டை, சச்சரவு டிச.18க்கு பிறகு அடியோடு மறையும். அதன் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். மனம் போல ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.  பிள்ளைகளின் செயல்பாடு பெருமை  அளிக்கும்.  சுபவிஷயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  குடும்பத்துடன் அடிக்கடி விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.21,22ல்   உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு.  ஜன.7,8ல் அவர்களின்  வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். டிச.16,   ஜன.11, 12 ல் பெண்கள் மிக உதவிகரமாக இருப்பர். மாத இறுதியில் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
 
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.  சேமிக்கும் விதத்தில் லாபம் அமோகமாக  இருக்கும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட  நிறுவனம்  முன்னேற்றம் பெறும்.  பங்கு வர்த்தகம்  நல்ல லாபத்தை தரும். டிச.17,18, ஜன.9,10,13ல்  சந்திரனால் தடை உருவாகலாம்.  டிச.25,26,  27ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் முன்னேற்றமான பலன் காண்பர்.  புதன் டிச.19 முதல் ஜன.8  வரை 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால்  சிறப்பான காலமாக அமையும்.  இந்த காலகட்டத்தில் சிலருக்கு  பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு  சிறப்பாக இருக்கும்.  விரும்பிய  பணி, இட மாற்றம்  கிடைக்க வாய்ப்புண்டு. பணி  நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில்  கிடைக்கும்.  ஜன.4,5,6ல்  எதிர்பாராத நன்மை நடக்கும்.

கலைஞர்கள் சமூகத்தில்  புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர்.  புதிய ஒப்பந்தம் எளிதாக கையெழுத்தாகும்.  வருமானமும்  அதிகரிக்கும்.  அரசிய ல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். செவ்வாயால் மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். மாத மத்தியில் புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில்  பங்கேற்று  வெற்றி காண்பீர்கள். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள்  நெல், மஞ்சள், கீரை, காய்கறி, பழவகைகள், கிழங்கு வகை பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். அதிக உழைப்பை சிந்த ÷ வண்டியதிருக்கும்.  வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்ப வாழ்வில்  மகிழ்ச்சியுடன் காணப்படுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மற்றும்  குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். மாத இறுதியில் விட்டுக்கொடுத்து போகவும். டிச.19,20ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். டிச. 28,29,30 ல்  சகோதரிகள் மிகவும்  ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். செவ்வாயால்  ஆ÷ ராக்கியம் குறையலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.

நல்ல நாள்: டிச.16,19,20,25,26,27,28,29, 30, ஜன. 4,5,6,7,8,11,12

கவன நாள்: டிச. 31, ஜன.1 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த  பேச்சு வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்:  வெள்ளை, பச்சை

பரிகாரம்: ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.  மஞ்சள் ஆடை தானம் கொடுக்கலாம்.  ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். செவ்வாய் அன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள்.

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar