பதிவு செய்த நாள்
14
டிச
2016
02:12
பெரியவர்களை மதிக்கும் கடகராசி அன்பர்களே!
சூரியன் இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை தருவார். சுக்கிரன் டிச.28க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். புதன் டிச.19 வரையும், ஜன.7க்கு பி றகும் தனுசு ராசியில் இருந்து நன்மை வழங்குவார். இடைப்பட்ட காலத்தில் அவர் வக்ரம் அடைந்து விருச்சிகத்தில் இருக்கும் காலத்தில் சுமாரான பலனே கிடைக்கும். ராசிக்கு 5ல் உள்ள சனியால் உங்களுக்கு நன்மையேதும் கிடைக்காது. ஆனால் அவரது 7ம் இடத்துப் பார்வையால் நற்பலன் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். பொருளாதார வளம் இருக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப விஷயம் குறித்த பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். டிச.19க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகலாம் கவனம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. டிச.28க்கு பிறகு சுக்கிரனால் நிலைமை சீராகும். அதன்பின் குடும்பத்தினர் மத்தியில் அமைதி நிலவும். டிச.17,18 ஜன.13ல் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும். டிச.23,24ல் உறவினர்கள் வகையில் செலவு ஏற்படலாம். அதே நேரம் ஜன. 9,10ல் உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். டிச.21,22ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். கேது,செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம். உடல்நலனில் அக்கறை தேவை.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். டிச.18க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை டிச.28க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். டிச.28,29,30ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். டிச.16,19, 20, ஜன.11,12ல் சந்திரனால் வீண்குழப்பம் உருவாகலாம் கவனம்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். டிச.19ல் இருந்து ஜன.8 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கிய பொறுப் புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஜன.8க்கு பிறகு புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம். சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும். ஜன.7,8ல் நற்பலனை எதிர்நோக்கலாம்.
கலைஞர்கள் டிச.28க்கு பிறகு தொழிலில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் எளிதாக கையெழுத்தாகும். வருமானமும் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அடிக்கடி தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுவர். மானாவாரி பயிர்கள், கீரை, காய்கறி மற்றும் பழ வகைகள் மூலம் நல்ல லாபத்தை காணலாம். கால்நடை வகையில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். மாத மத்தியில் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து ÷ பாவது நல்லது. டிச.31, ஜன.1 சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் உதவி உண்டு. விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: டிச. 17,18,21,22,28,29,30,31, ஜன. 7,8,9,10,13
கவன நாள்: ஜன. 2,3 இந்த நாட்களில் புதிய முயற்சி ஏதும் செய்ய வேண்டாம்.
சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தையைத் தள்ளிப் போடலாம். அனாவசியமாக எந்த விஷயத்திலும் தலையிடாமல் அமைதி காப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்குங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். சனிக்கிழமையில் அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.