பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
கன்னிவாடி, வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயிலில், நாளை குருபூஜை விழா நடக்கிறது. கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டியில், பிரசித்திபெற்ற மாரிமுத்து சித்தர் கோயில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். புனர்பூச நட்சத்திரத்தன்று, திருவாசக முற்றோதல் நடக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை புனர்பூசத்தில், சுவாமியின் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டிற்கான திருவிழா, இன்று துவங்குகிறது. பல்வேறு பகுதி பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வருவர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் இருந்து வேதி தீர்த்த அழைத்து வரப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை, நாளை டிச. 16ல் நடக்கிறது. தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடத்தப்பட்டு, மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடக்கும். விழாவை முன்னிட்டு அன்னதானம், திருவாசக முற்றோதல், தேவார பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.