பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 5 நாட்களில் ரூ.60.78 லட்சம் வசூலாகியுள்ளது. சபரிமலை சீசன் காரணமாக பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வங்கிகளின் பணத்தட்டுப் பாட்டை போக்க பழநி போன்ற முதுநிலை கோயில்களில் வாரதோறும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. அதன்படி பழநி மலைக்கோயில் 5 நாட்களுக்குபின் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. அதில் ரொக்கமாக ரூ. 60 லட்சத்து 78ஆயிரத்து 654, தங்கம் 760கிராம், வெள்ளி 1,300 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-195 கிடைத்துள்ளன. தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம், உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா பங்கேற்றனர்.