மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நேற்று தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிருபர்களிடம் அவர் கூறுகையில், வடகிழக்கு மாகாணங்களில் மிசோராம், மேகாலயா உட்பட மாநிலங்களில் ஆண்டு முழுவதும் நெல், பழம், பூக்கள் விவசாயம் செழிப்பாக நடக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். விவசாயி தற்கொலை செய்துகொள்வதில்லை," என்றார்.