பதிவு செய்த நாள்
21
டிச
2016
12:12
பந்தலுார்: பந்தலுார் அருகே, பிதர்காட்டில் சேவா பாரதி சார்பில், ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. பந்தலுார் அருகே, பிதர்காடு தஞ்சோரா முனீஸ்வரர் மாரியம்மன் கோவிலில், சேவா பாரதி சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற பூஜைக்கு விழாகால சேவா பாரதி நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்ம பிரச்சார் சமிதி மாவட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி, விளக்கு பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். அதில்,இந்த பூஜையில் பக்தியுடம், விளக்கு ஏற்றி, பிரார்த்தனை செய்வதன் மூலம் மனநிறைவுடன், ஐயப்பனை தரிசிக்க இயலும் என, கூறப்பட்டது. இதில், சேவா பாரதி மாவட்ட செயலாளர் விஜயன், மாவட்ட இணை தலைவர் சுஜாதா, குருசாமி சுப்ரமணி, வேலாயுதம், கனகராஜ், பாலன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.