பதிவு செய்த நாள்
21
டிச
2016
12:12
பந்தலுார்: பந்தலுார் தேவாலாயத்தில் நடந்த தேர்பவனி மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் புனித பிரான்சீஸ் சவேரியர் ஆலய தேர்த் திருவிழா நடந்த வருகிறது. இதை தொடர்ந்து, 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பங்குதந்தை ஜெயகுமார் தலைமையில் நவநாள், திருப்பலி நடந்தது. 18ல், காலை, 9:30 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 10:00 மணிக்கு ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் குழந்தைகளுக்கு புதுநன்மை உறுதி பூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், திருப்பலி பூஜையும் நடந்தது. பகல், 12:00 மணிக்கு விருந்தும், மாலை, 5:30 மணிக்கு மலையாள மொழி திருப்பலியும், தொடர்ந்து தேர்பவனியும், நற்கருணை ஆசீரும் நடந்தது. தேர்பவனி மற்றும் திருவிழாவில், பந்தலுார், உப் பட்டி, பொன்னானி, நெல்லியாளம், தேவாலா, சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தேவாலாய பங்கு தந்தை ஜோசப், உதவி பங்கு தந்தை மஜோஜோஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.