கரூர்: கரூர், கோட்டையண்ணன், பட்டவன் சுவாமி கோவில் திருவிழா நடந்தது. கரூர், கோட்டையண்ணன் மற்றும் பட்டவன் சுவாமி கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று, கோவிலில் இருந்து ப.வேலூரைச் சேர்ந்த சுடர்மணி இசைக்குழுவினர் வாத்தியத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடத்துடன் அமராவதி ஆற்றுக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், கோட்டையண்ணன் மற்றும் பட்டவன் சுவாமி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொது பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். பலர் நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.