குன்னுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2016 12:12
குன்னுார் : குன்னுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில், 16வது ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி நேற்று, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பழனி பாத யாத்திரை பக்தர்களின் பாடல்கள், விவேகானந்தர் ஜமாப் குழுவினரின் இடி முழக்கங்களுடன் விளக்குபூஜை நடந்தது. தந்திமாரியம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் சிவசுப்ரமணியர் தேர் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, குன்னுார் பழனி பாதயாத்திரை பக்தர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.