பதிவு செய்த நாள்
27
டிச
2016
01:12
திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை, 31 ஆயிரம் வடைமாலை சாற்றுதல் நடைபெறுகிறது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில் மற்றும் லட்சுமி குபேரர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை, 31 ஆயிரம் வடைமாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை, காலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. பின், காலை 5:30 மணிக்கு, ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனமும், அதை தொடர்ந்து, லட்சுமி குபேரர் திருமஞ்சனமும் நடைபெறும். பின், காலை 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெறும். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு, பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு, 31 ஆயிரம் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.