கோவை: கோவை அனைத்து கோயில்களி<லும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவை பீளமேட்டிலுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் ராஜ மாருதி அலங்காரத்தில் சுவாமி பக்கதர்களுக்கு அருள் பாலித்தார். கோவை பேரூர் ஹனுமந்தராய சுவாமி கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.