பதிவு செய்த நாள்
28
டிச
2016
12:12
திருத்தணி: பல்லவ மன்னர்களால், 300 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட மண்டபம், பராமரிப்பின்றி கிடப்பதால், தற்போது சேதம் அடைந்தும், ஆடு, மாடுகள் புகழுலிடமாகவும் மாறியுள்ளது. திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்டது நத்தம் கிராமம். இங்கு, 300 ஆண்டுகளுக்கு முன், ஏழு ஏக்கர் பரப்பளவில் வழிபோக்க ர்கள் தங்கும் மண்டபம் கட்டப்பட்டது. இங்கு, விநாயகர் சிலை மற்றும் பாதசாரிகள் மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் குளம் உருவாக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை இந்த மண்டபத்தில் முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு ஆற்காடு, வேலுார், குடியாத்தம், ஆம்பூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் இந்த மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து சிறப்பு பூஜைகள் செய்தும், குளத்தில் புனித நீராடி வந்தனர். பின், காவடிகளுடன் நடந்தே முருகன் கோவிலுக்கு சென்று காவடிகள் நேர்த் தி கடனை செ லுத்தி வந்தனர். இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது மண்டபம் உடைந்தும், ஆடு, மாடுகள் கட்டி வைத்துள்ளனர். அதேபோல் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாயும் ஆக்கிரமிப்பால் தண்ணீர் இல்லாமல், குளத்தின் படிகளும் சிதிலமடைந்துள்ளது. பழுதடைந்த மண்டபம் மற்றும் குளத்தை இந்து சமய அறநிலை துறையினர் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.